மேக்களூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம்


மேக்களூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம்
x
தினத்தந்தி 12 Oct 2017 4:00 AM IST (Updated: 11 Oct 2017 8:10 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் மேக்களூர் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் மேக்களூர் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குணசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் சுகுணர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் சரவணன் வரவேற்றார். 169 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு அதில் 90 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் மண்டல துணை தாசில்தார் முருகன், அன்பரசு, அரிபுத்திரன், ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா, கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் ஞானசேகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரவீன்குமார், பிரபாகர், சரிதா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேக்களூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி நன்றி கூறினார்.


Next Story