திருப்போரூர் அருகே மருந்து கடையில் ரூ.3 லட்சம் கொள்ளை


திருப்போரூர் அருகே மருந்து கடையில் ரூ.3 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Oct 2017 9:45 PM GMT (Updated: 11 Oct 2017 8:55 PM GMT)

திருப்போரூர் அருகே மருந்து கடையில் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 2 மாதத்தில் 3–வது முறையாக இதே கடையில் கொள்ளை நடந்துள்ளது.

திருப்போரூர்,

கல்பாக்கம் புதுபட்டினம் பகுதியை சேர்ந்தவர் ரவி. திருப்போரூரை அடுத்த கொட்டமேடு கிராமத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு ரவி சென்றார்.

மீண்டும் நேற்று காலை கடையை ரவி திறந்த போது மேற்கூரையான பிளாஸ்டிக் ஓடு உடைக்கப்பட்டு ரூ.3 லட்சம், ரூ.6 ஆயிரம் மதிப்பு வாசனை திரவியங்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து அவர் திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதே கடையில் கடந்த 2 மாதங்களில் ஏற்கனவே 2 முறை கொள்ளை சம்பவம் நடந்தது. இதனால் கடையில் கண்காணிப்பு கேமராக்களை ரவி பொருத்தினார்.

தற்போது 3–வது முறையாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் கண்காணிப்பு கேமராவின் வயர்களை துண்டித்து பணத்தை கொள்ளையடித்தார். ஒரு கேமராவை சரியாக துண்டிக்காததால் முகமூடி அணிந்த மர்ம நபரின் உருவம் பதிவானது. இது குறித்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.


Next Story