பா.ஜனதா தலைவர் அமித்ஷா மகனை கண்டித்து நாகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா தலைவர் அமித்ஷா மகனை கண்டித்து நாகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 10:45 PM GMT (Updated: 11 Oct 2017 10:01 PM GMT)

நாகையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா மகனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா போலியான நிறுவனம் தொடங்கி ஒரே ஆண்டில் ரூ.80 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி ஊழல் செய்துள்ளதை கண்டித்தும், ஊழலுக்கு துணை நிற்கும் மத்திய அரசை கண்டித்தும் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் சங்கரவடிவேல், ராமலிங்கம், சிறுபான்மை பிரிவை சேர்ந்த நவுசாத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவிச்சந்திரன், சிவபிரகாசம், ராதாகிருஷ்ணன், அப்துல்காதர், சுப்பிரமணியன், வெற்றிவேல், பிஸ்கின், ராஜாராமன், சிவசங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story