துப்புரவு பணியாளர்கள் வேலைநிறுத்தம் தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை
தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கும்பகோணத்தில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
கும்பகோணம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் தீபாவளி போனஸ் வழங்கக்கோரி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் உள்ள நகராட்சி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜேசுதாஸ் தலைமை தாங்கினார். இதில் துப்புரவு பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
துப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கும்பகோணம் பகுதியில் நேற்று குப்பைகள் தேங்கின. தீபாவளி போனசை உடனடியாக வழங்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக துப்புரவு பணியாளர்கள் கூறி உள்ளனர்.
முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் துப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கும்பகோணம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story