நாகர்கோவிலில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவிலில் நாளை நடக்கிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2017–2018–ம் ஆண்டில் கிராம நலன் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கம் கடந்த 1–ந் தேதி முதல் வருகிற 15–ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தரும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் உள்ளூர் மற்றும் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பெருநகரங்களிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளன.
8–ம் வகுப்பு முதல்...
வேலைவாய்ப்பு முகாமில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், தக்கலை, குருந்தங்கோடு, திருவட்டார், கிள்ளியூர், முன்சிறை மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நாகர்கோவில் நகராட்சி பகுதிகளை சேர்ந்த 8–ம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.), பட்டப்படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, நர்சிங், அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை (கலை அறிவியல் மற்றும் பொறியியல்) வரை படித்த 40 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் தங்களது கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதிச்சான்று (அசல் மற்றும் நகல்) மற்றும் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story