தீபாவளி சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி கணவன்-மனைவியிடம் போலீஸ் விசாரணை
தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காலாப்பட்டு,
புதுவை அரியாங்குப்பம் பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்து விட்டு ஜோதிடர், மளிகை கடை நடத்தி வந்த தாய், மகன்கள் இந்த நிலையில் காலாப்பட்டு பகுதியில் நேற்று ஒரு தம்பதி சீட்டுபணம் நடத்தி மோசடி செய்ததாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;-
புதுவை பெரியகாலாப்பட்டு வீரன் கோவில் வீதியில் வசித்து வருபவர் முனியப்பன் (வயது40). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஆஷா(36). அந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். மாதந்தோறும் பணம் வசூலித்து தீபாவளி சமயத்தில் இனிப்பு வகைகள், பாத்திரங்கள், பரிசுப்பொருட்கள் என 36 வகை பொருட்களை வழங்கி வந்தனர்.
இவர்களுக்கு சின்னகாலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு, கீழ்புத்துப்பட்டு, லாஸ்பேட்டை, கோட்டக்குப்பம், கனகசெட்டிகுளம் என பல்வேறு இடங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் இருந்தனர். 850க்கும் அதிகமானோர் இவர்களிடம் சீட்டு பணம் கட்டி வந்தனர்.
தீபாவளியையொட்டி முதல் வாரத்திலேயே பொருட்கள் வழங்கப்படும் என அனைவரிடமும் தெரிவித்து இருந்தனர். அதன்படி கடந்த வாரம் அவர்களால் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க முடியவில்லை.
கடந்த 2 தினங்களாக பொருட்கள் வாங்க அவரது வீட்டுக்கு சென்றவர்களிடம் தற்போது எங்களிடம் பணமும் இல்லை. பொருட்களும் இல்லை. எங்களுக்கு வரவேண்டிய பணம் வரவில்லை என கூறினர். இதனால் பணம் கட்டி பொருட்கள் வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து ஏராளமானோர் காலாப்பட்டு போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதில், முனியப்பன்-ஆஷா தம்பதியர் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தனர். அவர்களிடம் 850க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. போலீசில் புகார் கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களிடம் சுமார் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமாக பணம் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து முனியப்பன், ஆஷா இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story