அவினாசி அருகே பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்

அவினாசி,
கோவையில் இருந்து நேற்று மாலை ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் தெக்கலூருக்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு பஸ் கண்டக்டர், தெக்கலூரில் பஸ் நிற்காது என்றும், இது குறித்து ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். இதனால் கண்டக்டருக்கும், அந்த பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் அந்த பயணி தனது செல்போன் மூலம் தெக்கலூரில் உள்ள தனது நண்பர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்து விட்டு, கண்டக்டரிடம் அவினாசிக்கு டிக்கெட் வாங்கினார்.
அதை தொடர்ந்து அந்த பஸ் கோவை-சேலம் புறவழிச்சாலையில் தெக்கலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு திரண்டு நின்று கொண்டிருந்த பொதுமக்கள், அந்த பஸ்சை வழிமறித்து தெக்கலூருக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அதை தொடர்ந்து அந்த பஸ் புறவழிச்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் நுழைந்து தெக்கலூர் சென்றது. அங்கு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து சென்று, பொதுமக்களை சமரசம் செய்தனர். அப்போது போலீசார், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் “ தெக்கலூர் பஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிறைப்பிடித்த பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர்.
அதன்பின்னர் அந்த பஸ் புறப்பட்டு சென்றது.

Related Tags :
Next Story