விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது


விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது
x
தினத்தந்தி 15 Oct 2017 11:00 PM GMT (Updated: 15 Oct 2017 9:50 PM GMT)

பாபநாசத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம், அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.

பாபநாசம்,

பாபநாசம் தாலுகா வடக்கு மாங்குடி, அகரமாங்குடி, வேம்பக்குடி, தேவராயன்பேட்டை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி அய்யம்பேட்டை பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று (திங்கட்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதுகுறித்து பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் (பொறுப்பு) வெங்கடாசலம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வேளாண்மை உதவி இயக்குனர் குளஞ்சிநாதன், அய்யம்பேட்டை வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், அகரமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர்கள் லதா, சத்யா, ரவிக்குமார், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் காதர்உசேன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் உமாபதி, ஒன்றிய துணை செயலாளர் காவேரிசெல்வன், ஒன்றியத்தலைவர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாபநாசம் தாலுகாவில் வடக்கு மாங்குடி, அகரமாங்குடி, வேம்பக்குடி, தேவராயன்பேட்டை ஆகிய கிராமங்களில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ஒரு வார காலத்திற்குள் பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் இன்று நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story