சேலம் மாநகராட்சி பகுதியில் மருந்து தெளிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்
சேலம் மாநகராட்சி பகுதியில் மருந்து தெளிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
சேலம்,
சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வரி வருவாய், குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் செயலாக்கம், பணியாளர்களின் நிர்வாக நலன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது மாநகராட்சி மற்றும் மண்டல நகராட்சி பகுதிகளில் விடுபட்டுள்ள அல்லது குறைவாக விதிக்கப்பட்ட சொத்து வரி மற்றும் தொழில் வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணங்கள் மதிப்பீடு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் செயல்பாடுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உரிய கால அளவிற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் பேசியதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் தொற்று நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான அளவு மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகள், அம்மா உணவகங்கள், வழிபாட்டுத்தலங்கள், சத்துணவு மையங்கள், சேலம் ரெயில் நிலையத்தில் வழங்கிட வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் தினசரி பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் திரவ வடிவிலான குளோரின் வழங்குவதற்கான நடவடிக்கையினை ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் எடுத்து, அதன் அடிப்படையில் தற்போது 60 வார்டுகளுக்கும் சீரான அளவில் திரவ வடிவிலான குளோரின் குடிநீரில் கலந்து வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார பிரிவினர் அனைத்து பகுதிகளிலும் தினசரி மருந்து தெளிப்பு பணிகளையும், தீவிர துப்புரவு பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குனர் லட்சுமி, செயற்பொறியாளர்கள் அசோகன், ரவி, காமராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயலட்சுமி, நகராட்சி மண்டல பொறியாளர் திருமாவளவன், உதவி மாநகர நல அலுவலர் (பொறுப்பு) வசந்த திவாகர், உதவி ஆணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story