நிலநடுக்கத்தை தாங்கும் சிமெண்ட்


நிலநடுக்கத்தை தாங்கும் சிமெண்ட்
x
தினத்தந்தி 16 Oct 2017 7:40 AM GMT (Updated: 16 Oct 2017 7:40 AM GMT)

பூகம்பத்தில் இருந்து, கட்டிடங்களைக் காக்கும் நவீன காங்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டுக்க முடியாத பேரழிவை உருவாக்கும் பூகம்பத்தில் இருந்து, கட்டிடங்களைக் காக்கும் நவீன காங்கிரீட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த சிமெண்ட் - காங்கிரீட் கலவையை உருவாக்கி இருக்கிறார்கள். இதைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள், மிகவும் உறுதியாக இருப்பதோடு, நிலநடுக்க நேரத்தில் நெகிழ்தன்மையோடு செயல்பட்டு கட்டிடம் சரிவடைவதை தடுக்கிறது. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் மீதும் இந்த காங்கிரீட் கலவையை பூசி, பாதுகாப்பு ஏற்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும். ஆய்வகத்தில் 10 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட காங்கிரீட் பூச்சு உருவாக்கி, 9 ரிக்டர் அளவுடைய நடுக்கத்தை உருவாக்கி சோதித்து வெற்றி கண்டுள்ளனார். இது 2011-ல் ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்திற்கு சமமானது என்பது நினைவூட்டத்தக்கது. கட்டிடத்திற்கு உறுதி வழங்கும் இந்த காங்கிரீட் ஆயிரக்கணக்கான உயிர்களை ஆபத்திலிருந்து காக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

Next Story