அ.தி.மு.க.வின் 46–வது ஆண்டு தொடக்க விழா: நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு


அ.தி.மு.க.வின் 46–வது ஆண்டு தொடக்க விழா: நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2017 9:00 PM GMT (Updated: 2017-10-17T20:32:54+05:30)

அ.தி.மு.க.வின் 46–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நெல்லை,

அ.தி.மு.க.வின் 46–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை


அ.தி.மு.க.வின் 46–வது ஆண்டு தொடக்க நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை ராஜா, ஜெயலலிதா பேரவை துணை தலைவர் கணபதிசுந்தரம், பகுதி செயலாளர்கள் ஹயாத், தச்சை மாதவன், கிருஷ்ணமூர்த்தி, மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தர்மலிங்கம், கோபாலகிருஷ்ணன், அக்ரோ தலைவர் மகபூப்ஜான், பாஞ்சாலராஜன், வக்கீல்கள் நெல்லை மானா, திருமலையப்பன், கேபிள் சுப்பையா, விவேகானந்த பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பாளையங்கோட்டையில் இருந்து முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் செண்டை மேளத்துடன் ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து இனிப்பு வழங்கினார்கள். இதில் வக்கீல் ஜெனி, முன்னாள் கவுன்சிலர் பரமசிவம், டி.பி.எம்.மூகைதீன்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினகரன் அணியினர்...

அ.தி.மு.க. தினகரன் அணியினர் அமைப்பு செயலாளர்கள் ஆர்.பி.ஆதித்தன், கல்லூர் வேலாயுதம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் பால் கண்ணன், துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, வீ.கே,.பி.சங்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், மாணவர் அணி செயலாளர் ஸ்ரீவை சின்னத்துரை, ஆவீன் அண்ணாசாமி, தொழில் நுட்ப பிரிவு செயலாளர் எம்.சி.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து நெருக்கடி

தீபாவளியையொட்டி வண்ணார்பேட்டையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்ததால் கொக்கிரகுளம் பகுதியிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தை வாகனங்களில் செல்வோர் கடந்து செல்ல ½ மணி நேரம் ஆகியது.


Next Story