காஞ்சீபுரம் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
காஞ்சீபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவர் அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி ஆட்டோவை ஓட்டிச்சென்றார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரம் என்ற இடத்தில் செல்லும்போது திடீரென ஆட்டோ கவிழ்ந்தது. இதில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிக்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சீபுரத்தை அடுத்த ஆனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாரி (43). இவர் மின்துறையில் கணக்கீட்டாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மாரி மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரத்தில் இருந்து வையாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மாரி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடதத்தி வருகிறார்.