தேவேந்திர பட்னாவிஸ் தத்தெடுத்த கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் வெற்றி


தேவேந்திர பட்னாவிஸ் தத்தெடுத்த கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் வெற்றி
x
தினத்தந்தி 18 Oct 2017 5:00 AM IST (Updated: 18 Oct 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

கிராம பஞ்சாயத்து தேர்தலில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தத்தெடுத்த கிராமத்தில்,

நாக்பூர்,

காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் ஆதரவுபெற்ற பெண் வேட்பாளர் தேர்வானார். முதன் முறையாக திருநங்கை ஒருவரும் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வாகி இருக்கிறார்.

மராட்டியத்தில் 3 ஆயிரத்து 666 கிராம பஞ்சாயத்துகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. முதன் முறையாக கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேரடி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, பொதுமக்களே வாக்களித்து பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுத்தனர். மொத்தம் 81 சதவீதம் வாக்குப்பதிவு ஆனது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

பிரதமர் மோடியின் கிராம மேம்பாட்டு திட்டத்தின்கீழ், நாக்பூர் மாவட்டம் பெத்ரி என்ற கிராமத்தை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், 2 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்தார். இந்த கிராமத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் ஆதரவுபெற்ற பெண் வேட்பாளர் தனஸ்ரீ தோம்னே வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதே வேளையில், பெத்ரி கிராம பஞ்சாயத்தில், மொத்தம் உள்ள 9 இடங்களில், 5 இடங்களை பா.ஜனதா கைப்பற்றி ஆறுதல் தேடிக்கொண்டது. தவிர, மின்சார துறை மந்திரியும், நாக்பூர் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சந்திரசேகர் பவன்குலேயால் தத்தெடுக்கப்பட்ட சூரதேவி கிராமத்தில், காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் சுனில் தூத்பச்சாரே என்பவர் வெற்றி பெற்றார்.

மராட்டிய கிராம பஞ்சாயத்து தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக திருநங்கை ஒருவரும் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது பெயர் தியானதேவ் சங்கர் காம்பிளே. சோலாப்பூர் மாவட்டம் மல்சிராஸ் தாலுகா தாரங்க்பால் கிராம பஞ்சாயத்து தலைவராக அவர் தேர்வாகி இருக்கிறார். தன்னை எதிர்த்து களமிறங்கிய 6 வேட்பாளர்களை புறந்தள்ளி, அவர் வெற்றி வாகை சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தான் தத்தெடுத்த பெத்ரி கிராமத்தில் காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றியது குறித்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் மும்பையில் நிருபர்கள் கருத்து கேட்டனர். அவர் கூறியதாவது:–

நான் மொத்தம் 4 கிராமங்களை தத்தெடுத்திருக்கிறேன். அரசியல் நோக்கத்தில் அந்த கிராமங்களை தத்தெடுக்கவில்லை என்று ஏற்கனவே பொதுமக்களிடம் கூறியிருக்கிறேன். ஒரு முறை அங்கு பிரசாரத்துக்கு சென்றபோது கூட, உங்களுக்கு பிடித்த வேட்பாளரை சுதந்திரமாக தேர்வு செய்யுங்கள் என்று சொன்னேன்.

கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும், தூய்மையான கட்சி தொண்டர்கள். அடுத்த மாதம் பா.ஜனதா சார்பில் தேர்வான பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரையும் கூட்டி மாநாடு நடத்துவோம். அப்போது, யதார்த்தத்தை பொதுமக்கள் அறிந்து கொள்வர்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

சோலாப்பூர் மாவட்டத்தில் திருநங்கை, பஞ்சாயத்து தலைவரானார்

மராட்டிய கிராம பஞ்சாயத்து தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக திருநங்கை ஒருவரும் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது பெயர் தியானதேவ் சங்கர் காம்பிளே. சோலாப்பூர் மாவட்டம் மல்சிராஸ் தாலுகா தாரங்க்பால் கிராம பஞ்சாயத்து தலைவராக அவர் தேர்வாகி இருக்கிறார். தன்னை எதிர்த்து களமிறங்கிய 6 வேட்பாளர்களை புறந்தள்ளி, அவர் வெற்றி வாகை சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story