டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பவர் மீது நடவடிக்கை
டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்ட இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டாரத்தில் பல கிராமங்களில் சிறுவர், சிறுமிகள் உள்பட பலர் டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் அவினாசி வட்டார பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பழங்கரை ஊராட்சி பெரியாயிபாளையம், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நேற்று காலை இந்த பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திட்ட இயக்குனர் ஆய்வு
இந்த பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் கொசுப்புழு உள்ளதா என்று சோதனை செய்தார்.
பின்னர் தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் வீட்டில் சேமித்துள்ள தண்ணீரில் கொசுப்புழு கண்டறியப்பட்டால், அதில் அபேட் மருந்து ஊற்ற வேண்டும் என்றும், தண்ணீர் தொட்டிகளை பிளச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யவும் சுகாதார ஊழியர்களுக்கு அறிவுரை கூறினார்.
கடும் நடவடிக்கை
இவ்வாறு டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், அவர்களை பணி செய்யவிடாமல் தடுப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதற்கிடையே திட்ட இயக்குனர் காலை 7.30 மணிக்கு ஆய்வுக்கு வந்த போது, அதிகாரிகள் சிலர் தாமதமாக வந்தனர்.
இதை பார்த்த அவர், கலெக்டர் அதிகாலையிலேயே ஒவ்வொரு கிராமமாக சென்று ஆய்வு மேற்கொள்கிறார். நீங்கள் தாமதமாக வருகிறீர்கள். ஒரு வேலையும் ஒழுங்காக செய்யவில்லை என்று அவர்களை கண்டித்தார்.

Related Tags :
Next Story