பூலாம்பட்டியில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
பூலாம்பட்டியில், இருப்பாளி கூட்டுகுடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ரோடு சேதம் அடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எடப்பாடி,
சேலம் மாவட்டம், பூலாம்பட்டியை அடுத்த குப்பனூர் பகுதி காவிரி ஆற்றில் உள்ள இருப்பாளி கூட்டுகுடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குடிநீர் குழாய்கள் மூலம் வன்னிய நகரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று இந்த ராட்சத குடிநீர் குழாய் இணைப்பு குப்பனூர் காலனி அருகே திடீரென்று அழுத்தம் காரணமாக உடைந்தது. இதனால் அந்த குழாயில் இருந்து தண்ணீர் சுமார் 5 அடி உயரத்திற்கு பீறிட்டது. அந்த தண்ணீர் குப்பனூர் பக்கநாடு ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ரோடு சேதமடைந்து அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள சின்னதுரை, வெங்கடாசலம், நல்லப்பன் உள்பட 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. ஆராயிமுனியன் என்பவரின் குடிசையில் தண்ணீர் புகுந்ததால் ஒருபக்க சுவர் இடிந்துவிழுந்தது.
தங்கவேலு என்பவரின் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் அந்த விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட நெல்பயிர் முழுவதும் அடித்துச்செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது, ‘அடிக்கடி ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. மேலும் சேதமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார்கள்.

Related Tags :
Next Story