தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு மர்மச்சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2–வது நாளாக போராட்டம்


தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு மர்மச்சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2017 2:30 AM IST (Updated: 20 Oct 2017 6:36 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பெரியார் நகரை சேர்ந்த அருள்தாசன் மகள் அருள்ஜோதி என்ற பியூலா (வயது 23).

நெல்லை,

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பெரியார் நகரை சேர்ந்த அருள்தாசன் மகள் அருள்ஜோதி என்ற பியூலா (வயது 23). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 18–ந் தேதி இரவில் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த போது திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். அவரது மர்மச்சாவு குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே நர்சின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் நேற்று 2–வது நாளாக தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர், ஆதிதிராவிடர் மகாஜன சங்கத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நர்சு மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நர்சின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் நர்சின் உடலை வாங்கவில்லை. உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


Next Story