மாநகராட்சி பகுதி குடிநீர் தேவைக்கு கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் கீதாஜீவன் வேண்டுகோள்

மாநகராட்சி பகுதி குடிநீர் தேவைக்கு கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் கீதாஜீவன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Oct 2017 2:30 AM IST (Updated: 20 Oct 2017 6:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

குடிநீர் வினியோகம்

தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட வார்டு எண் 3–க்கு உட்பட்ட மீளவிட்டான், சில்வர்புரம், சின்னகண்ணுபுரம், வி.எம்.எஸ். நகர், ஹவுசிங் போர்டு, ராஜகோபால்நகர், அன்னை தெரசா நகர், புஷ்பா நகர், காந்தி நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கும், 34–வது வார்டுக்கு உட்பட்ட மடத்தூர், முருகேசன் நகர், தபால் தந்தி காலனி, கதிர்வேல்நகர் ஆகிய பகுதிகளுக்கும் கோரம்பள்ளம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மேலும் கோரம்பள்ளம் குளத்தில் பல ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

தண்ணீர் திறக்க வேண்டும்

கடந்த 6 மாதங்களாக கோரம்பள்ளம் குளத்தில் நீர் வரத்து நின்று விட்டதால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் வடகாலில் கடைசியில் உள்ள கோரம்பள்ளம் குளத்திற்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story