பனப்பாக்கம் அருகே அங்கன்வாடி மையம், வீடுகளில் தண்ணீர் புகுந்தது
பனப்பாக்கம் அருகே அங்கன்வாடி மையம், வீடுகள், துணை சுகாதார நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
பனப்பாக்கம்,
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்ததொடர் மழையின் காரணமாக ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர்நிலையான காவேரிப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 28 அடி உயர்ந்ததை தொடர்ந்து கடந்த 17-ந் தேதி காவேரிப்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது. இதனால் சிறுவளையம், உளியநல்லூர், ஜாகீர்தண்டலம், புன்னை உள்பட 55 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது இந்த ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.
பனப்பாக்கத்தை அடுத்த பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள கால்வாய் சரியான முறையில் தூர்வாரப்படாததால் கால்வாயில் பல இடஙகளில் அடைப்பு ஏற்பட்டு பொய்கைநல்லூர் கால்வாயில் சென்ற தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து விநாயகபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்தது.
50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீருடன் கழிவுநீரும் புகுந்ததால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு மற்றும் கால்வாய் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் எங்கள் பகுதியில் ஏரிநீருடன் கழிவுநீர் ஊருக்குள் புகுந்தது. எனவே, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொய்கைநல்லூர் கால்வாயை தூர்வார வேண்டும்’ என்றனர்.
மேலும் பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையம், பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் சிகிச்சை பெறும் துணை சுகாதார நிலையத்திலும் ஏரி நீர் புகுந்தது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் தெருகுழாய்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் ஏரிநீருடன் கழிவுநீர் கலந்துள்ள இடத்திலேயே பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.
எனவே, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பொய்கைநல்லூர் கிராமத்தில் ஏரிநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story