நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எழுதி வெற்றி பெற 21 இடங்களில் பயிற்சி மையங்கள்


நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எழுதி வெற்றி பெற 21 இடங்களில் பயிற்சி மையங்கள்
x
தினத்தந்தி 21 Oct 2017 8:45 PM GMT (Updated: 2017-10-21T19:41:18+05:30)

நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எழுதி வெற்றி பெற 21 இடங்களில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

நெல்லை,

நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எழுதி வெற்றி பெற 21 இடங்களில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

21 இடங்களில் பயிற்சி மையம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர தமிழகத்தில் நீட் என்ற நுழைவுத்தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள பயிற்சி மையங்கள் பள்ளி கல்வித்துறை மூலம் தொடங்கப்பட உள்ளது.

அதுபோல பிளஸ்–2 மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிப்பில் சேர்ந்து படிக்க மத்திய அரசு எந்த போட்டித்தேர்வுகளை கொண்டுவந்தாலும் அந்த தேர்வுகளை எழுதி வெற்றி பெற நெல்லை மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களில் 21 பயிற்சி மையங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைக்கப்பட உள்ளது.

இணையதளத்தில்...

இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வழியாக பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த உடன் விண்ணப்பித்ததற்கான அடையாள சீட்டு கிடைக்கும். அதைக் கொண்டு எந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புகிறீர்களோ அந்த மையத்திற்கு செல்லலாம். தினமும் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு மாலையில் இந்த பயிற்சி அளிக்கப்படும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலும், மாலையிலும் பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story