தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Nov 2017 2:30 AM IST (Updated: 31 Oct 2017 5:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 1–1–18–ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் நடந்தது. இதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யும் பணிகள் 31–10–17 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான காலஅவகாசம் வருகிற 30–11–17 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வருகிற 30–ந் தேதி வரை வழங்கலாம்.

வீடு, வீடாக...

நவம்பர் 2017 மாதம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், அவர்களுக்கு உரிய பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் விடுபட்டு உள்ள நபர்களின் விவரங்களை சேகரிக்க உள்ளனர். அப்போது, 1–1–19 தேதியில் 18 வயது பூர்த்தியடைபவர்களின் விவரங்கள், குடும்பத்தினரின் செல்போன் எண், இ–மெயில் முகவரி ஆகியவற்றையும் சேகரிக்க உள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story