சிக்னலை மீறி ரெயிலை இயக்கிய டிரைவர்கள் பணி இடைநீக்கம்
சிக்னலை மீறி ரெயிலை இயக்கிய டிரைவர்கள் உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மும்பை,
மத்திய ரெயில்வேயின் குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு நீண்டதூர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சம்பவத்தன்று காலியான ரெயில் ஒன்று பின்னோக்கி பிளாட்பாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் என்ஜினை டிரைவர் தினேஷ்குமார் என்பவர் இயக்கினார்.துணை டிரைவராக சிவேஷ்குமார் என்பவர் பணியில் இருந்தார். அப்போது, அங்குள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ரெயில் பெட்டிகள் அந்த சிக்னலை கடந்து சென்றன.
அதே நாளில் ரெயில் என்ஜின் ஒன்று சிக்னலை மீறி சென்றது. அந்த என்ஜினை டிரைவர் குந்தன் ஜாம்பலே, துணை டிரைவர் சந்திப் வாக் ஆகியோர் இயக்கினர்.ஒரே நாளில் அடுத்தடுத்து ரெயில் பெட்டிகள் மற்றும் என்ஜின் சிக்னலை மீறி சென்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில், டிரைவர்கள் தினேஷ்குமார், குந்தன் ஜாம்பலே, துணை டிரைவர்கள் சிவேஷ்குமார், சந்திப் வாக், பாயிண்ட்மேன் ஆல்வர்ட் ஆகிய 5 பேரை மத்திய ரெயில்வே அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story