மணல் கொள்ளையை தடுக்கக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகை


மணல் கொள்ளையை தடுக்கக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகை
x
தினத்தந்தி 1 Nov 2017 4:15 AM IST (Updated: 1 Nov 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

மணல் கொள்ளையை தடுக்கக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகை 92 பேர் கைது

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் எல்.மாங்குப்பம் பகுதியில் உள்ள பாலாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில், இலவசமாக பொதுமக்கள் மணல் எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு மணல் அள்ள சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு லாரி, லாரியாக அதிகாரிகளின் துணையோடு மணல் விற்பனை செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் மணல் கடத்தலை தடுக்கக்கோரியும் அதற்கு துணைபோகும் அதிகாரிகளை கண்டித்தும் வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆம்பூர் கிராமச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பிரபு தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. செயல் தலைவர் சரவணன், பொருளாளர் கொத்தூர் மகேஷ் மற்றும் ஒன்றிய தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஆம்பூர் நகர தலைவர் சி.கே.பிரபு வரவேற்றார். இதில் நகர தலைவர்கள், மகளிரணி பொதுச்செயலாளர் கிருஷ்ணவேனி, முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கர், முன்னாள் துணை தலைவர் என்.சங்கரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிராமச்சாவடி அலுவலகத்தின் நுழைவு வாயிலை தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அவர்களில் 92 பேரை ஆம்பூர் டவுன் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


Related Tags :
Next Story