உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்


உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்  கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்
x
தினத்தந்தி 1 Nov 2017 9:30 PM GMT (Updated: 1 Nov 2017 2:44 PM GMT)

உலக சிக்கன நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.

தூத்துக்குடி,

உலக சிக்கன நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வெங்கடேஷ் வழங்கினார்.

உலக சிக்கன நாள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உலக சிக்கன நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அப்போது, அவர் கூறியதாவது;–

மக்கள் தங்கள் உழைப்பால் ஈட்டிய பணத்தை சிறுசேமிப்பிற்கு உகந்த அமைப்பான அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகை அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை எதிர்கொள்ள பெரிதும் பயன்படும். சிறுக சிறுக சேமிப்பதன் மூலம் குடும்பத்தில் எதிர்காலத்தில் தேவைப்படும் அவசர தேவைகளுக்கான செலவுகளை எளிதில் எதிர் கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சல்

பள்ளி மாணவர்கள் சிறு வயது முதல் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். மாணவர்கள் படிப்போடு சேர்த்து பொது அறிவையும் வளர்க்கவேண்டும். பள்ளி மாணவ– மாணவிகள் டெங்கு காய்ச்சலை தடுக்க தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பள்ளிகள், வீடு அருகில் உள்ள இடங்கள் வெளிப்புறம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story