பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 10–ந் தேதி நடக்கிறது.
ஈரோடு,
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.பி.ரவி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
உள்ளாட்சி அமைப்புகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுவதில் முதல் நகல் வாங்குவதற்கு ரூ.17, அதற்கு மேல் ஒவ்வொரு நகலுக்கும் ரூ.5 கட்டணமாக செலுத்தி வழங்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசு கட்டண உயர்வை பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதில் ஒவ்வொரு நகல் வாங்குவதற்கும் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்ளது. எனவே பிறப்பு, இறப்பு சான்றிதழ்களின் விலை உயர்வை கண்டிக்கிறோம். மேலும் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 10–ந் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறிஇருந்தார்.
Related Tags :
Next Story