வாலிகண்டபுரம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
வாலிகண்டபுரம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் பழமை வாய்ந்த வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவில் அருகில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் பல லட்சம் பொருட்செலவில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கோவிலில் பூஜைகள் நடந்தன. பின்னர் கோவில் பூசாரி நரசிம்மன் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
உண்டியல் உடைப்பு
இதையடுத்து நேற்று காலை கோவில் பூசாரி நரசிம்மன் வழக்கம் போல் கோவில் நடையை திறக்க வந்தார். அப்போது கோவிலின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த உண்டியலை மர்மநபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் பூசாரி நரசிம்மன் மங்களமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்து தீவிர சோதனை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story