தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்க–வைர நகைகள் கொள்ளை


தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்க–வைர நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 3 Nov 2017 2:00 AM IST (Updated: 2 Nov 2017 5:38 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்க–வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்க–வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

வீட்டின் கதவை உடைத்து...

தூத்துக்குடி சங்கர்காலனி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனமாரிமுத்து. இவருடைய மனைவி அன்னலட்சுமி (வயது 55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சந்தனமாரிமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். மகள் திருமணமாகி பெங்களூருவில் வசித்து வருகிறார். பெங்களூருவில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக அன்னலட்சுமி கடந்த 24–9–2017 அன்று சென்று விட்டார். இந்த நிலையில் பெங்களூரு சென்று விட்டு நேற்று முன்தினம் அன்னலட்சுமி ஊருக்கு புறப்பட்டு வந்தார். அப்போது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

கொள்ளை

உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ஒரு ஜோடி வைர கம்மல் மற்றும் 5 பவுன் தங்கநகைள், 2 குத்துவிளக்குகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னலட்சுமி தூத்துக்குடி தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story