தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 151 மில்லி மீட்டர் பதிவு


தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை  அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 151 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 3 Nov 2017 2:00 AM IST (Updated: 2 Nov 2017 7:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் பலத்த மழை பெய்தது. குலசேகரன்பட்டினத்தில் அதிகபட்சமாக 151 மில்லி மீட்டர் மழை பெய்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் பலத்த மழை பெய்தது. குலசேகரன்பட்டினத்தில் அதிகபட்சமாக 151 மில்லி மீட்டர் மழை பெய்தது.

பலத்த மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான மழை பெய்யாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர். நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மாவட்டத்தின் தென்பகுதியில் கனமழை பெய்தது.

நேற்று முன்தினம் அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 151 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. தூத்துக்குடியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஆங்காங்கே பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது. உப்பளங்களிலும் தண்ணீர் நிரம்பி நிற்கிறது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தேங்கிய மழைநீரை விரைந்து அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. நேற்று மாலை 4 மணி வரை ஸ்ரீவைகுண்டத்தில் 40 மி.மீ மழை பெய்தது. இதனால் நேற்று மாலை 3 மணியுடன் பள்ளிக்கூடங்கள் முடிக்கப்பட்டு, மாணவ–மாணவிகளை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்க மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அதன்படி மாணவ–மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மழைவிவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழைவிவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–

கோவில்பட்டி– 4

ஓட்டப்பிடாரம்– 60

சாத்தான்குளம்– 28.40

ஸ்ரீவைகுண்டம்– 76

தூத்துக்குடி– 25.20

திருச்செந்தூர்– 86

கயத்தாறு– 63

காயல்பட்டினம்– 84

குலசேகரன்பட்டினம்– 151

கீழஅரசடி– 40

எட்டயபுரம்– 11

கடம்பூர்– 5

மணியாச்சி– 10

வேடநத்தம்– 2

கழுகுமலை– 5


Related Tags :
Next Story