மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி


மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி
x
தினத்தந்தி 3 Nov 2017 3:45 AM IST (Updated: 3 Nov 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

வாரியங்காவல்,

அரியலூர் மாவட்டத்தில் 52 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் டீனாகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 6 ஆயிரத்து 579 மாணவ-மாணவிகளுக்கு ரூ.9 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். இதில் மாவட்ட துணைச்செயலாளர் தங்க பிச்சமுத்து, ஜெகன்ராஜ் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை நன்றி கூறினார். 
1 More update

Related Tags :
Next Story