லாட்டரியில் பரிசு விழுந்து இருப்பதாக கூறி மூதாட்டியிடம் ரூ.9¼ லட்சம் மோசடி


லாட்டரியில் பரிசு விழுந்து இருப்பதாக கூறி மூதாட்டியிடம் ரூ.9¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 2 Nov 2017 9:30 PM GMT (Updated: 2 Nov 2017 9:04 PM GMT)

லாட்டரியில் பரிசு விழுந்து இருப்பதாக கூறி, மூதாட்டியிடம் ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

லாட்டரியில் பரிசு விழுந்து இருப்பதாக கூறி, மூதாட்டியிடம் ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

லாட்டரியில் பரிசு

மும்பை மாகிம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ரேணு(வயது 70). இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இ–மெயில் ஒன்று வந்தது. அந்த இ–மெயிலில் மூதாட்டி ரேணுவுக்கு லாட்டரியில் 40 ஆயிரம் பவுண்டு பரிசு விழுந்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து ரேணு இ–மெயில் அனுப்பியவர்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர்கள், சேவை கட்டணம் கொடுத்தால் பரிசு தொகை கிடைக்கும் என மூதாட்டியிடம் கூறினர்.

இதை நம்பிய மூதாட்டி பல தவணைகளாக ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்தை அவர்கள் கூறிய வங்கிக்கணக்கில் செலுத்தினார். ஆனால் சொன்னது போல மூதாட்டிக்கு பரிசு தொகை கிடைக்கவில்லை.

ரூ.9¼ லட்சம் மோசடி

மூதாட்டி கேட்கும் போதெல்லாம் விரைவில் பரிசு தொகையை தருவதாக கூறிவந்தனர். இந்தநிலையில் சமீபகாலமாக மூதாட்டி ரேணுவால் இ–மெயில் அனுப்பியவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து மாகிம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாட்டரியில் பரிசு விழுந்ததாக மூதாட்டியிடம் ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story