ஜோலார்பேட்டையில் சரக்கு ரெயிலில் வந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு


ஜோலார்பேட்டையில் சரக்கு ரெயிலில் வந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
x
தினத்தந்தி 4 Nov 2017 3:45 AM IST (Updated: 3 Nov 2017 10:44 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து மேட்டூருக்கு 56 பெட்டிகளுடன் நிலக்கரி பாரம் ஏற்றி கொண்டு சரக்கு ரெயில் புறப்பட்டது.

ஜோலார்பேட்டை,

சென்னையில் இருந்து மேட்டூருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு 56 பெட்டிகளுடன் நிலக்கரி பாரம் ஏற்றி கொண்டு சரக்கு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர் அந்த ரெயில் யார்டில் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று ரெயில்வே ஊழியர்கள் ரெயிலில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிந்தனர். அப்போது கார்டு பெட்டியில் இருந்து 8–வது பெட்டியில் 12 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவனேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு வந்த வனசரகர் பரமசிவம் மற்றும் ஊழியர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து, ஏலகிரிமலை காட்டில் விட்டனர்.


Next Story