மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்
வசாய்– விரார் மாநகராட்சியில் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் பிரகாஷ், மோகன், பிரதீப் மற்றும் கணேஷ். இவர்களுக்கு உதவி கமிஷனர்களுக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.
பால்கர்,
வசாய்– விரார் மாநகராட்சியில் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் பிரகாஷ், மோகன், பிரதீப் மற்றும் கணேஷ். இவர்களுக்கு உதவி கமிஷனர்களுக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. இவர்கள் நாலாசோப்ரா பகுதியில் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி நடத்திய விசாரணையில், ஊழியர்கள்கள் 4 பேரும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட கூடாத இடங்களில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்கள் இது குறித்து தவறான தகவல்களை மேல்அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள்கள் 4 பேரும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story