தானேயில் தீ விபத்து மரக்குடோன், 5 குடிசைகள் எரிந்து நாசம்


தானேயில் தீ விபத்து மரக்குடோன், 5 குடிசைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 4 Nov 2017 3:45 AM IST (Updated: 4 Nov 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் மரக்குடோனில் பற்றிய தீ அருகில் இருந்த 5 குடிசைகளும் பரவியது. இதில், மரக்குடோன், 5 குடிசைகளும் எரிந்து நாசமாகின.

தானே,

தானேயில் மரக்குடோனில் பற்றிய தீ அருகில் இருந்த 5 குடிசைகளும் பரவியது. இதில், மரக்குடோன், 5 குடிசைகளும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

தானே மேற்கு கர்வாலோ நகர் 22–ம் எண் சாலை பகுதியில் மரக்குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடோனையொட்டி உள்ள குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். குடோன் தீப்பிடித்து எரிவதை பார்த்து அவர்கள்  ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் தீ குடிசை வீடுகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

தீ விபத்து பற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினரின் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

தீ விபத்தின் போது அங்குள்ள ஓடி வீட்டின் மேல் தளத்தில் இருந்த தீபா(வயது29) என்ற பெண் தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதேபோல இர்பான் அன்சாரி (55) என்பவர் லேசான தீக்காயம் அடைந்தார். அவர்களை தீயணைப்படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story