ஜனவரி மாதம் முதல் கோலார் தங்கவயல் தனி தாலுகாவாக செயல்படும்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கோலார் தங்கவயல் தனி தாலுகாவாக செயல்படும் என்று மந்திரி ரமேஷ்குமார் கூறினார்.
கோலார் தங்கவயல்,
கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று மந்திரி ரமேஷ்குமார் தலைமையில் தாசில்தார்கள், வருவாய்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோலார் தொகுதி எம்.பி. கே.எச்.முனியப்பா, கலெக்டர் சத்தியவதி, உதவி கலெக்டர் வித்யாகுமாரி, பங்காருபேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி, தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ராமக்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் மந்திரி ரமேஷ்குமார் பேசுகையில், கோலார் தங்கவயலை தனி தாலுகாவாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாநில அரசு அறிவித்தது. மேலும் அங்கு தாசில்தார் அலுவலகம் அமைக்க நிதியும் ஒதுக்கியது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு(2018) ஜனவரி மாதம் முதல் கோலார் தங்கவயல் தனி தாலுகாவாக செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.Related Tags :
Next Story