பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்


பவானிசாகர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 5 Nov 2017 3:15 AM IST (Updated: 5 Nov 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தை சேர்ந்தவர் மாதையன். இவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது.

புஞ்சைபுளியம்பட்டி,

பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தை சேர்ந்தவர் மாதையன். இவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, மாதையனின் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை மிதித்து நாசம் செய்தது.

 இதுபற்றி உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் கொளுத்தியும் யானையை காட்டுக்குள் விரட்டினார்கள். எனினும் சுமார் 100 வாழை மரங்கள் சேதம் அடைந்தன.


Next Story