ஊராட்சி மன்ற அலுவலகத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை
எரகுடியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரம் அருகே எரகுடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நூறு நாள் வேலையை நிறுத்தியதை கண்டித்தும், அதில் வேலை செய்தவர்களுக்கு 12 வாரங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்காததை கண்டித்தும் நடந்த இந்த போராட்டத்துக்கு சங்க ஒன்றிய தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரி சகாயராஜ் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உடனடியாக அனைவருக்கும் வேலை வழங்கப்படும், வேலை பார்த்தவர்களுக்கு ஊதியம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Tags :
Next Story