திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற 2 பக்தர்கள் திடீர் சாவு போலீஸ் விசாரணை
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற புதுக்கோட்டை, புதுச்சேரியை சேர்ந்த 2 பக்தர்கள் திடீரென உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வது என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில், பவுர்ணமி நேற்று முன்தினம் மதியம் 12.10 மணிக்கு தொடங்கி நேற்று பகல் 11 மணி அளவில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பகலில் இருந்து நேற்று பகல் வரை திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 38), அவரது நண்பர் ஆனந்தகுமார் (43) ஆகியோர் நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு வந்தனர்.
திடீர் சாவு
இதனையடுத்து அவர்கள் 2 பேரும் கிரிவலம் சுற்றி கொண்டிருந்தபோது திருநேர் அண்ணாமலையார் கோவில் அருகே உள்ள வள்ளலார் கோவில் முன்பு வந்தபோது முருகனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் கிரிவலப் பாதையிலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட அவரது நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலாளி
அதேபோல் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவசூரியன் (48). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக அவர் திருவண்ணாமலைக்கு வந்தார். நேற்று அதிகாலையில் சிவசூரியன் கிரிவலம் சென்றதாக தெரிகிறது.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகே செல்லும்போது அங்குள்ள டீக்கடை முன்பு ஓய்வெடுத்து உள்ளார். பின்னர் அவர், திடீரென இறந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story