திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் தங்கநகை மோசடி


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் தங்கநகை மோசடி
x
தினத்தந்தி 5 Nov 2017 4:03 AM IST (Updated: 5 Nov 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் தங்க நகைகளை மோசடி செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தானே,

தானே, ஸ்ரீநகரை சேர்ந்த 17 வயது பெண்ணிற்கு கடந்த ஆண்டு முல்லுண்டு பகுதியை சேர்ந்த ராகேஷ் (வயது 26) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மலர்ந்தது. இந்தநிலையில் 17 வயது பெண் வசதி படைத்தவர் என்பதை வாலிபர் அறிந்தார். எனவே அவர் பெண்ணிடம் பணம் பறிக்க திட்டம் போட்டார். சம்பவத்தன்று வாலிபர், பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளாமல் என ஆசை வார்த்தை கூறி வீட்டில் உள்ள பணம், நகையை எடுத்து வருமாறு கூறினார்.

இதை உண்மையென நம்பிய பெண், வீட்டில் இருந்து ரூ.22 லட்சம் மதிப்பிலான 70 பவுன் தங்கநகைகளை எடுத்து கொண்டு வந்து ராகேஷிடம் கொடுத்தார். இதையடுத்து ராகேஷ், அவரது தம்பி ஆகாஷ் (22), வாக்ளே எஸ்டேட் பகுதியை சேர்ந்த பாவனா ஆகியோர் சேர்ந்து, 17 வயது பெண்ணை திருமணத்திற்கு அலங்காரம் செய்யவேண்டும் என கூறி அழகுநிலையத்திற்கு அழைத்து சென்றனர். அந்த பெண் அழகு நிலையத்திற்குள் சென்றதும். அவர்கள் 3 பேரும் நகையுடன் மாயமாகினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஸ்ரீநகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் ராகேஷ் மலாடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆகாஷ், பாவனா ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story