மாநில அரசின் சாதனை விளம்பரத்தில் பாங்காக் நகர படம் காங்கிரஸ் குற்றச்சாட்டு


மாநில அரசின் சாதனை விளம்பரத்தில் பாங்காக் நகர படம் காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Nov 2017 4:10 AM IST (Updated: 5 Nov 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

மாநில அரசின் 3 ஆண்டு சாதனை விளம்பரத்தில் பாங்காக் நகர படம் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

மும்பை,

மாநில அரசின் 3 ஆண்டு சாதனையை விளக்கும் வகையில் மந்திராலயாவில் 50 விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பலகையில் பாங்காக் நகர படம் இடம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து அக்கட்சி மூத்த தலைவர் சாவந்த் கூறும்போது, ‘‘ மந்திராலயாவில் நகர்புற வளர்ச்சி குறித்து வைத்துள்ள விளம்பரத்தில் பாங்காக் படத்தை போட்டுள்ளனர். இதன் மூலம் பா.ஜனதாவை பொய் சொல்லும் நோய் தாக்கி இருப்பதை தெளிவாக அறியலாம்.

பாங்காக்கில் உள்ளது போன்ற சாலையை மராட்டியத்தில் எங்கும் கண்டுபிடிக்க முடியாது. இப்போது மாநில அரசு பாங்காக்கும் மராட்டியத்தின் ஒரு பகுதிதான் என்று சொல்ல வாய்ப்பு உள்ளது’’ என்று கிண்டலாக கூறினார்.

காங்கிரசின் இந்த குற்றச்சாட்டு குறித்து மாநில அரசின் செய்தி தொடர்பாளர் பிரிஜேஸ் சிங் கூறும்போது, பேனரில் பாங்காக் நகர சாலை இடம்பெற்ற விவகாரம் விளம்பர ஒப்பந்த நிறுவனம் செய்த தவறாகும். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.


Next Story