ரெயில்கள் தாமதமாக இயங்கியதால் பயணிகள் அவதி
வாராந்திர பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் தாமதமாக இயங்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
மும்பை,
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள திவா– கல்யாண் இடையே விரைவு வழித்தடத்திலும், துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி.– சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே இருமார்க்கத்திலும் நேற்று வாராந்திர பராமரிப்பு பணிகள் நடந்தன.பராமரிப்பு பணி நடந்தபோது, துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூர் செல்லும் ரெயில்களும், மேற்கண்ட இடங்களில் இருந்து சி.எஸ்.எம்.டி. வரும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. சி.எஸ்.எம்.டி.– அந்தேரி இடையேயும் மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை.
மெயின் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக குறைவான மின்சார ரெயில் சேவைகளே இயக்கப்பட்டன. மதிய நேரத்தில் ஒரு மணி நேரம் வரையிலும் ரெயில்கள் தாமதமாக இயங்கின. இதனால் ரெயில்களில் கடும் கூட்ட நெரிசல் இருந்தது.Related Tags :
Next Story