குமரி மாவட்டத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகள்; விஜயகுமார் எம்.பி. ஆய்வு
குமரி மாவட்டத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளை விஜயகுமார் எம்.பி. ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரையும், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சிறு வாய்க்கால்கள், பெரிய வாய்க்கால்கள் செல்லும் பகுதிகளில் பாசன நிலங்களுக்கு சீராக தண்ணீர் செல்லும் வகையிலும், மழை வெள்ளம் சீராக வடிந்தோடும் வகையிலும் 2 மீட்டர் முதல் 10 மீட்டர் உயரம் வரையில் தேவைக்கேற்ப சிறு பாலங்கள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஆனால் சில இடங்களில் பாலங்களுக்கு பதிலாக ஆட்கள் நுழைய முடியாத வகையிலான நீளமான சிமெண்டு குழாய்கள் பதிக்கப்படுவதாகவும், இதனால் மழை வெள்ளம், பாசனத்துக்கான தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், எனவே அந்த மாதிரியான இடங்களில் சிறு, சிறு பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகுமார் எம்.பி.யிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதையடுத்து விஜயகுமார் எம்.பி. நேற்று குமரி மாவட்ட பாசனத் தலைவர் வக்கீல் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, முருகேசபிள்ளை, விஜி உள்ளிட்டோருடன் சென்று நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறும் இடங்களைப் பார்வையிட்டார். அப்போது நாக்கால் மடம், வழுக்கம்பாறை ஆகிய பகுதிகளில் வாய்க்கால்கள் செல்லும் பகுதிகளில் குழாய் அமைக்கும்பணி நடைபெறுவதை ஆய்வு செய்தார். அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள் குழாய்கள் அமைப்பதால் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து விஜயகுமார் எம்.பி.யிடம் விளக்கி கூறினர். அதற்கு அவர், விவசாயிகள் பாதிக்காத வகையில் இந்த பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.
முன்னதாக டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக ஈசாந்தி மங்கலம் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை யின் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திரன், கனகராஜன், தாணுப்பிள்ளை, வக்கீல் முருகேஸ்வரன், ஆனந்த், மணிகண்டன், ராஜன், ஜேம்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story