மாநகராட்சி ஒப்பந்ததாரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தானேயில் மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தானே,
தானே காசர்வட்வல்லி காய்முக் பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் நின்று கொண்டிருந்த காரில் நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காருக்குள் அந்த நபர் மார்பில் துப்பாக்கி குண்டு துளைத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் துப்பாக்கி ஒன்றும் கிடந்தது.போலீசார் அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் காருக்குள் இருந்து கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், குடும்பத்தினர் என்னை மன்னித்து விடுங்கள் என எழுதப்பட்டு இருந்தது.
இதன் மூலம் இறந்து கிடந்த நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.பின்னர் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் தானே பாஞ்ச்பாகாடியை சேர்ந்த சங்கேத் ஹனுமான் ஜாதவ்(வயது40) என்பதும், மாநகராட்சி ஒப்பந்ததாரராக இருந்து வந்ததும் தெரியவந்தது.
Related Tags :
Next Story