உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த வாலிபர் கைது


உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2017 3:15 AM IST (Updated: 7 Nov 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

மதுரை நெல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகம்மது அசாருதீன்(வயது 22). இவர் மேலகோபுர தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார்.

மதுரை,

மதுரை நெல்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகம்மது அசாருதீன்(வயது 22). இவர் மேலகோபுர தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த 7,500 ரூபாயை 3 பேர் பறித்து சென்று விட்டனர். இதனால் மனவருத்தம் அடைந்த முகம்மது அசாருதீன் திடீர்நகர் போலீஸ் நிலையத்திற்கு உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு வந்தார். இதை பார்த்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர். அப்போது தன்னிடம் பணம் பறித்த தகவலை தெரிவித்து, தனக்கு உரிய நிவாரணம் கிடைக்கவே இவ்வாறு செய்ததாக கூறினார். இதைதொடர்ந்து முகம்மது அசாருதீனின் இந்த தவறான நடவடிக்கை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் அவருக்கு பாட்டிலில் பெட்ரோல் வழங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் முருகன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story