சேத்தியாத்தோப்பு அருகே வீடுகளை சூழ்ந்த மழைநீரை வடிய செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்


சேத்தியாத்தோப்பு அருகே வீடுகளை சூழ்ந்த மழைநீரை வடிய செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Nov 2017 3:30 AM IST (Updated: 7 Nov 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே வீடுகளை சூழந்த மழைநீரை வடிய செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேத்தியாத்தோப்பு,

சிதம்பரம் அருகே உள்ளது சாக்காங்குடி கிராமம். தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக, இந்த கிராமத்தில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இங்குள்ள நீர்நிலைகளும் தூர்வாரப்படாமல் இருப்பதால், அங்கிருந்து வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தேங்கி நின்று வருகிறது. இதை வடிய செய்வதற்கு முறையான வாய்க்கால் வசதிகள் எதுவும் இல்லாததால், நெற்பயிர்கள் அழுகும் அபாய நிலையில் இருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாக்காங்குடி பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம்–சேத்தியாத்தோப்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாசில்தார் மகேஷ், கீரப்பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து நிற்கும் மழைநீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அதிகரி£கள் தெரிவித்தனர். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story