திங்கள்சந்தை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,100 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
திங்கள்சந்தை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,100 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
அழகியமண்டபம்,
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய், பருப்பு வகைகள் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க வருவாய்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனாலும், ரேஷன் பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பறக்கும் படை தாசில்தார் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் திங்கள் சந்தை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அதிகாரிகள் காரை நிறுத்துமாறு கைகாட்டினர். ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை துரத்தி சென்றனர்.
பாலூர் என்ற இடத்தில் சென்றபோது, காரை மடக்கி பிடித்தனர். உடனே, டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து, காரை சோதனையிட்ட போது, அதில் பிளாஸ்டிக் கேன்களில் 1,100 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது. இது கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் காருடன், மண்எண்ணெயை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story