குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை மனு
கொல்லங்கோடு பகுதியில் உள்ள குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் மனு கொடுத்தார்.
நாகர்கோவில்,
வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது.
முகாமுக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், அந்தோணிமுத்து உள்பட பலர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் ராஜேஷ்குமார் கூறியிருப்பதாவது:–
கொல்லங்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட அய்யன்குளம் என்ற வெண் குளத்தின் மதகுப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பயன்படுத்தும் படித்துறை மற்றும் குளக்கரைகள் இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. “அய்யன்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே இன்று (அதாவது நேற்று) நடைபெறுகிற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு வந்தேன். ஆனால் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வருகிற 8–ந் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அதனால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவில்லை. அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
குமரி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் தங்கம் நடேசன் தலைமையில் அனிதா மற்றும் பலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், “பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது.
கோழிப்போர்விளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய பெண்கள் கிராம முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் அருட்பணியாளர் பபியான்ஸ் தலைமையில் வந்து தனித்தனியாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட ஆற்றூர் பகுதியைச் சேர்ந்தவரும், தேசிய வாள்ச்சண்டை விளையாட்டு வீரருமான டேவிட்ராஜ், இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு டெல்லியில் 180 நாட்களுக்கு மேலாக போராடி வருகிறார். தற்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மனமுடைந்து வேதனையடைந்துள்ளனர். எனவே அவரை போராட்ட களத்தில் இருந்து மீட்டு சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதேகோரிக்கையை வலியுறுத்தி திருவட்டார் அருகே உள்ள சரல்விளை தேமானூரைச் சேர்ந்த பாஸ்டர் ஜோஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் ஆட்டுக்குளம் காலனியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் தலைமையில் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் பகுதியைச் சேர்ந்த 22 பேரை கத்தார் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். அதற்காக நபர் ஒருவருக்கு ரூ.45 ஆயிரம் வீதம் 22 பேருக்கும் மொத்தமாக ரூ.9 லட்சத்து 90 ஆயிரத்தை ஈத்தாமொழியைச் சேர்ந்த ஒருவரிடம் கட்டினோம். இரண்டு ஆண்டு ஒப்பந்தம் எனச்சொல்லி வேலைக்கு எடுத்த அவர் 3 மாதத்தில் திருப்பி அனுப்பி, திட்டமிட்டு ஏமாற்றி விட்டார். பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. அவருடைய தந்தையிடம் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். அவரிடம் கேட்டபோது, அவர் தகாத வார்த்தைகளால் எங்களை திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுக்கிறார். எனவே இந்த மனுமீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அவர்கள் மனு கொடுத்தனர்.
அம்பேத்கர் திராவிட மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் நிறுவன தலைவர் ஏ.கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதில், அகஸ்தீஸ்வரம் தாலுகா நீண்டகரை கிராமத்தில் 17 வருடங்களுக்கு முன்பு சிறப்பு தாசில்தாரால் வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாவுக்கு இதுவரை இடம் வழங்கப்படவில்லை. எனவே இடம் வழங்கி, பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story