அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 17 பேர் கைது
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 17 பேர் கைது
திருச்சி,
கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடந்த மாதம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா அரசை விமர்சித்து ஒரு கேலிசித்திரம் வரைந்து இருந்தது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட போலீசார் ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலாவை கைது செய்தனர். இதனை கண்டித்தும், நெல்லை மாவட்ட கலெக்டரை போலீசார் கைது செய்யக்கோரியும் திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் அந்த அமைப்பினர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகே நேற்று காலை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஊர்வலமாக வந்தனர். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தடுத்து நிறுத்திய இடத்திலேயே சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டரை கைது செய்யக்கோரியும், ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலாவை விடுதலை செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த பாடகர் கோவன் ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா கைதை கண்டித்து பாட்டு ஒன்று பாடினார். இதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story