கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு
நரசிங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு
வாரியங்காவல்,
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் வங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்கம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. மேலும் அப்பகுதி வழியாக மாணவ- மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை அகற்றி விடுவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் மீண்டும் கடந்த 4-ந் தேதி அப்பகுதியில் ஒருவரின் மோட்டார் கொட்டகையில் டாஸ்மாக் கடை வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வருதாகவும், இதனால் அவ்வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கும், களையெடுக்க வயலுக்கு செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் வருகிற 10-ந் தேதியன்று காலை 10 மணி அளவில் பாப்பாகுடி சாலையில் மறியலில் ஈடுபடுவோம் என்று உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம், மீன்சுருட்டி போலீஸ் நிலையம், பாப்பாகுடி மின்சார அலுவலகம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். மேலும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி துண்டு பிரசுரமும் வழங்கினர்.

Related Tags :
Next Story