சாத்தான்குளம் அருகே வாலிபர் எரித்துக்கொலை யார் அவர்? போலீசார் விசாரணை
சாத்தான்குளம் அருகே வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் அருகே வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் எரித்துக்கொலைதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்–நாசரேத் மெயின் ரோட்டில் ஆனந்தபுரத்தில் இருந்து பழங்குளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் சிறிது தூரத்தில் காட்டு பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் நேற்று காலையில் சுமார் 25 வயது மதிக்கக்கத்த வாலிபர் ஒருவர் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது முகம் தவிர கழுத்துக்குகீழ் உள்ள பகுதி முழுவதும் தீயில் எரிந்து இருந்தது. அவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலின் அருகில் சந்தன நிற சட்டையும், ஒரு ஜோடி செருப்புகளும் கிடந்தன. மேலும் அங்கு காலியான அரை லிட்டர் குளிர்பான பாட்டிலில் சிறிது பெட்ரோலும் இருந்தது. இதனால் அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து இருப்பது தெரிய வந்தது.
போலீசார் விசாரணைநேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் அந்த இடத்தில் பதிவான தடயங்களை பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை எதற்காக கொலை செய்தனர்? அவரை வேறு எங்கேனும் அடித்துக் கொன்று இங்கு கொண்டு வந்து உடலை போட்டு எரித்து சென்றனரா? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.