வாரிசு சான்றிதழுக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தாசில்தார்-வருவாய் ஆய்வாளர் கைது
ராசிபுரத்தில் வாரிசு சான்றிதழுக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஓலப்பட்டி. இங்கு வசித்து வரும் ஜவுளி வியாபாரி துரைசாமியின் மகன் சுரேஷ் (வயது 24). என்ஜினீயர். இவர் சூரியஒளி (சோலார்) உபகரணங்களை விற்பனை செய்வதோடு பழுதுபார்க்கும் தொழிலும் செய்து வருகிறார்.
சுரேஷ் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினரும், மின்னக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியருமான இளங்கோவிற்கு (51) வாரிசு சான்றிதழ் கேட்டு ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதற்கான சரி பார்க்கும் பணி வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதற்கிடையே வாரிசு சான்றிதழ் வழங்க தாசில்தார் ரத்தினம் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்கு சுரேஷ் மறுத்து விட்டார். பின்னர் ரத்தினம் ரூ.15 ஆயிரம் கேட்டு உள்ளார். கடைசியில் ரூ.10 ஆயிரம் தரும்படி கூறி உள்ளார். இதேபோல் தாலுகா அலுவலகத்தில் வேலைபார்த்து வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலச்சந்திரன் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டு இருக்கிறார்.
இதையடுத்து கடந்த 3-ந் தேதி தாசில்தார் ரத்தினத்தை சந்தித்த சுரேஷ் ரூ.3 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது மீதித் தொகையையும் கொடுக்கும்படி அவரிடம் தாசில்தார் ரத்தினம் கேட்டுள்ளார். இதையடுத்து சுரேஷ் நாமக்கல் லஞ்சஒழிப்பு போலீசில் இதுபற்றி புகார் செய்தார்.
பின்னர் போலீசார் அறிவுறுத்தலின்படி நேற்று மதியம் 2 மணியளவில் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு சுரேஷ் சென்று ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரத்தை தாசில்தார் ரத்தினத்திடமும், ரூ.5 ஆயிரத்தை பாலச்சந்திரனிடமும் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட தாசில்தார் ரத்தினம் வாரிசு சான்றிதழை சுரேஷிடம் வழங்கினார். சான்றிதழை வாங்கி விட்டு சுரேஷ் வெளியே வந்துவிட்டார்.
அப்போது தாசில்தார் அலுவலகத்தில் மறைந்திருந்த நாமக்கல் லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ரத்தினத்தையும், பாலச்சந்திரனையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். கைதான 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட தாசில்தார் ரத்தினத்தின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் வாழப்பாடி ஆகும். தற்போது இவர் நாமக்கல்லில் குடியிருந்து வருகிறார். கைது செய்யப்பட்ட பாலச்சந்திரனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் ஆகும்.
ரத்தினம் கடந்த ஒரு ஆண்டாக ராசிபுரத்தில் தாசில்தார் ஆக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு இவர் ராசிபுரத்தில் வட்ட வழங்கல் அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story