பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் 8 நாட்கள் ரத்து


பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் 8 நாட்கள் ரத்து
x
தினத்தந்தி 8 Nov 2017 4:00 AM IST (Updated: 8 Nov 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் மயிலாடுதுறை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் 8 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி,

கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை 8 நாட்களுக்கு வண்டி எண் 16233 மயிலாடுதுறை-திருச்சி, அதே போன்று வண்டி எண் 16234 திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று வண்டி எண்-76824 திருச்சி-தஞ்சை, வண்டி எண்-76827 தஞ்சை-திருச்சி பயணிகள் ரெயில் வருகிற 11-ந்தேதி(சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56821 மயிலாடுதுறை-நெல்லை, வண்டி எண்-56822 நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 11-ந்தேதி(சனிக்கிழமை) முதல் 13-ந்தேதி (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு நெல்லையில் இருந்து திருச்சிக்கும், அதேபோன்று திருச்சியில் இருந்து நெல்லைக்கு மட்டும் இயக்கப்படும். மயிலாடுதுறைக்கு செல்லாது. மேலும், வண்டி எண் 56824 திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் இன்று முதல் 15-ந்தேதி வரை 8 நாட்களுக்கு கும்பகோணம் வரை மட்டும் செல்லும்.

தாமதமாக புறப்படும் ரெயில்கள்

இதேபோன்று வழக்கமாக 11-25 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-நெல்லை பயணிகள் ரெயில் இன்று முதல் 10-ந்தேதி வரையும் மற்றும் 14, 15-ந்தேதி ஆகிய 5 நாட்கள் 20 நிமிடம் தாமதமாக 11.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும்.

வண்டி எண் 56711 காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயில் இன்று முதல் 15-ந்தேதி வரை திருவாரூர் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட 15 நிமிடம் கூடுதலாக நின்று செல்லும். வண்டி எண் 18495 ராமேஸ்வரம்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் 12-ந்தேதி ஒரு நாள் மட்டும் திருச்சி ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட 30 நிமிடம் கூடுதலாக நின்று செல்லும். 56822 நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 14 மற்றும் 15-ந்தேதி ஆகிய 2 நாட்கள் திருச்சி ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூடுதலாக 30 நிமிடம் நின்று செல்லும்.

மேற்கண்ட தகவல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Related Tags :
Next Story